கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை புதன் 4 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சூர்யனும் புதனும் இணைவர், சனி பகவான் வக்ரம் அடைகிறார், சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை அவசரப்பட்டு எந்தவொரு முடிவினையும் எடுக்காதீர்கள். எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து முடிவுகளை எடுத்தல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை 3 ஆம் இடத்தில் குரு பகவான் இட அமர்வு செய்துள்ளார், குருவின் பார்வை இருந்தாலும் குருவின் பலம் இல்லாததால் திருமண காரியங்களில் தடையே நீடிக்கும்.

சுக்கிரன் 6 ஆம் இடத்தில் இருக்க செவ்வாய் நீச்சம் அடைகிறார். வரன் கைகூடி வந்து தட்டிப் போகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடக்கும்.

மேலும் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் பெரும் பிரச்சினைகளாக வெடிக்கும். புதனின் பெயர்ச்சியால் மாணவர்கள் சிறிது மன அழுத்தத்தில் இருப்பர்; ஆனால் தேவையில்லாத விஷயங்களை யோசிப்பதைத் தவிர்த்தல் நல்லது.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தேவையில்லாத விஷயங்கள் குறித்து யோசிப்பதை நிறுத்தினால் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். உயர் கல்வி சார்ந்த விஷயங்களுக்காக பண உதவிகளைத் தேடுங்கள். வெளியூர், வெளிநாடுகள் சென்று கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையப் பெறும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன உளைச்சல்கள் நிறைந்ததாக இருக்கும்; பேச வேண்டிய இடங்களிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பேசுங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.