கும்பம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை அலைச்சல், மன உளைச்சல் என கடந்த காலங்களில் பலவகைகளில் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள், அதில் இருந்து ஓரளவு மீளும் மாதமாக ஜனவரி மாதம் இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்களே உங்களின் எதிர்காலத்தை தொலைநோக்குப் பார்வையால் பார்ப்பீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எடுக்கும் முயற்சிகளை சிறிதாக எடுக்காமல் தைரியத்துடன் பெரு முயற்சியாக எடுப்பீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் தள்ளிப் போகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மாறுபட்ட கருத்துகள் நிறைந்து காணப்படுவீர்கள்.

வீண் வாக்குவாதங்கள் பிரிவுக்கு இட்டுச் செல்லும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக இதுவரை இருந்த மோசமான சூழ்நிலைகளில் இருந்து மீள்வீர்கள். கடந்த காலங்களில் இழந்ததை தைரியத்துடன் செயல்பட்டு ஓரளவு மீட்பீர்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன உளைச்சல், அலைச்சல், வேலைப்பளு, நிம்மதியின்மை என நீங்கள் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவு மீள்வீர்கள்.

உறவுகளுக்குள் ஏற்பட்ட மன ஸ்தாபங்கள் குறையும். உடன் பிறப்புகள் சொத்துரீதியாக பல பிரச்சினைகள் செய்து இருந்தநிலையில், தற்போது இணக்கமாகி வருவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.