கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கும்ப ராசிக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். குடும்பத்தில் சுபகாரியங்களுக்குப் பஞ்சம் இருக்காது. திருமண காரியங்கள் விறுவிறுவென கைகூடும். வரன் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்தும் சட்டென நடந்தேறும்.

பெற்றோர் இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். வேலைவாய்ப்புரீதியாக இடமாற்றம், பதவி மாற்றம் போன்ற விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். ஆனால் கடந்த கால விஷயங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். மனதினை ஒருநிலைப் படுத்தி தியானம் செய்து வருதல் நல்லது.

ஜென்ம சனி இருப்பதால் உடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படும்; உடற்பயிற்சியினைத் தவறாமல் செய்து வருதலால் பல உடல் கோளாறுகளைத் தவிர்க்கலாம். முதுகுத் தண்டுவடம், நரம்புக் கோளாறுகள், மூட்டு வலி, எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.

குடும்பத்தில் பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரும் மன வேறுபாடுகளை புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்வர். குடும்பத்தினைவிட்டு தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதுப் பொறுப்புகள் உங்கள் தலைமேல் வரும்.

அரசுரீதியான வேலைகளுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். வண்டி வாகனப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும். அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews