கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை விரயச் சனியில் இருந்து ஜென்ம சனிக்கு இடப் பெயர்வு அடைகின்றது. கடந்த காலங்களில் பெரிய அளவிலான விரயங்களைச் சந்தித்து இருப்பீர்கள். 11 ஆம் இடத்தில் சுக்கிரன்- சூர்யன்- புதன் இணைந்து காணப்படுகின்றது.

செவ்வாய் 4 ஆம் இடத்தில் வக்ர கதியில் உள்ளார், ராகு 3 ஆம் இடத்தில் உள்ளார். உங்களின் லாபத்துக்கு நீங்கள் திட்டமிடலாம். வேலைவாய்ப்புரீதியாக இதுவரை வேலை கிடைக்காமல் நாட்கள் விரயமாகி இருந்தாலும் தற்போது அதற்கு தீர்வு கிடைக்கும் காலமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் அமையும் பட்சத்தில் கையோடு முடித்தல் நல்லது. கொடுத்த பணம் வசூலாகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் ஓரளவு குறையும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மாணவர்கள் மந்தநிலையில் இருந்து மீள்வார்கள். கவனச் சிதறல்கள் தற்போது குறையும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மனரீதியான பிரச்சினையில் இருந்து மீண்டும் நிம்மதியுடன் இருப்பர்.

ஆரோக்கியம்ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறையும், மேலும் மருத்துவ செலவுகளும் குறையும். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வீர்கள். டிசம்பர் மாதம் பல பிரச்சினைகளுக்கும் நிவர்த்திதரும் மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.