கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

ஏழரை சனியில் இருக்கும் கும்பம் இராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் விரயச் செலவுகளை ஏற்படுத்தும் மாதமாகவே இருக்கும்.

புதிய தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபடுவோர், இருக்கும் வேலையினை விட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்வோர், தொழிலை அபிவிருத்தி செய்வோர் அதற்கான முயற்சியினை தற்போதைக்கு ஈடுபடாமல் இருத்தல் நல்லது.

பங்குச் சந்தையில் ஈடுபட நினைப்போர் அந்த நினைப்பிற்கு இன்னும் சில மாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

குருவின் வக்கிரம் உங்களுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் எவ்வளவு அலைந்தும் பெரிதளவில் வரன்கள் கூடாமலேயே இருந்துவரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சச்சரவு மிகுந்த வாழ்க்கையாகவே உள்ளது. உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழ வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்து பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

உடல் நலனைப் பொறுத்தவரையில் விரய செலவுகள் கொண்டதாக இருக்கும். கூடுதல் கவனமாக இருத்தல் நல்லது. பெற்றோர் உடல்நலனில் அக்கறை கொண்டு செயல்படுதல் வேண்டும். புதன் எட்டாம் இடத்தில் உச்சத்தில் இருப்பதால் மாணவர்கள் குழப்பம் மிகுந்து காணப்படுவர்.

பொறுமை, சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே சவாலான இந்த காலகட்டத்தினை ஜெயிக்க உதவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews