கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை கும்பத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார், குரு பகவான் 3ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சுக்கிரன் 4ஆம் இடத்தில் அமர்வு செய்துள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. புது வேலைக்கு முயற்சித்தல், வேலையில் மாற்றம் செய்தல், இட மாற்றம் செய்தல் என்பது போன்ற விஷயங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.

மேலும் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும்; கடன்கள் வாங்கும்போது திருப்பிச் செலுத்துவது குறித்த சரியான திட்டமிடலுடன் வாங்குதல் வேண்டும்; இல்லையேல் அவமானத்தைச் சந்திக்க நேரிடும்.

தொழில்ரீதியாக பணம் இழுபறியில் இருக்கும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் தாமதமாகவே கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள்ரீதியாக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். செலவுகள் விரயச் செலவுகளாக அமையும்; முடிந்தளவு திட்டமிட்டு சுபச் செலவுகளாகவும் ஆதாயச் செலவுகளாகவும் செய்யவும்.

ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்கும், குடும்பத்தில் எதிர்பாராத உறவினர் வருகை இருக்கும். திருமண காரியங்கள் என்று எடுத்துக் கொண்டால் வரன் பார்த்தல் ரீதியாக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். மேலும் வரன் தேர்வு செய்தலில் இழுபறி இருக்கும்.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது கடுமையான எதிர்ப்பு நிலவும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மன விரிசல் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews