கும்பம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

கும்ப ராசி அன்பர்களே! செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் வீண் செலவுகள் குடும்பத்தில் ஏற்படும். செவ்வாயின் பார்வை சனி பகவான் மீது இருப்பதால் ஆரோக்கியம் சார்ந்த செலவினங்கள் அதிகமாகவே இருக்கும்.

ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பலத்தில் உள்ளார். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தாய் வழி ரீதியாக உதவிகள் கிடைக்கும்.

ராசிக்கு 3 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளார், உடன் பிறப்புகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். ராசிக்கு 9 ஆம் இடத்தில் சுக்கிரன் உள்ளார், தாயின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். தந்தைவழியில் தொழில்ரீதியாக முன்னேற்றம் இருக்கும்.

செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருப்பதால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பர்.  குழந்தைகள் கல்விரீதியாக மேம்பட்டு இருப்பர். மனைவியின் ஆரோக்கியத்தில் சிறு கோளாறுகள் ஏற்படும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.

தொழில்துறை முன்னேற்றம் தெய்வ புண்ணியத்தால் சிறப்பாக இருக்கும். ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.