கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2022!

யோக பலன்கள் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு பிரச்சினைகள் பெரிய அளவிலான பிளவுகளுக்கு வழிவகுக்கும்.

உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகம் ஏற்றம் பெறும். வெளி வட்டாரத்தில் உங்கள் நிலை மேம்பட்டுக் காணப்படும்.

குழந்தைகள் கல்வி ரீதியாக ஏற்றம் பெற்றுக் காணப்படுவார்கள். குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு கூடாது. அதேபோல் பிறர் குடும்ப விஷயத்தில் நாம் தலையிடவே கூடாது.

இரகசியங்களை இரகசியமாகவே வைத்திருத்தல் மட்டுமே நல்லது. பூமி சார்ந்த விஷயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்திய பிரச்சினைகள் சட்டென்று முடிவுக்க வரும்.

தொழில் ரீதியான அபிவிருத்தியை துணிந்து செய்யுங்கள், நீங்கள் எதிர்பாராத லாபத்தினைக் கொடுக்கும். அரசுப் பணி பெற காத்திருந்தவர்களுக்கு நற் செய்தி தேடிவரும். உத்தியோகஸ்த்தில் இருக்கும் சிக்கல்கள் தீர தீர மனக் கவலைகள் குறையும்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க கையில் இருக்கும் ஒரே ஆயுதம் பொறுமை மட்டும் தான்.

காதல் செய்வோருக்கு பிரிவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். சிவ வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews