கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2018!

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் அதிர்ஷ்டம் கைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். கும்ப ராசியினருக்கு கோட்சார கிரக நிலைகள் நன்றாக அமைந்து இருப்பதால் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது.

உங்கள் திறமை பளிச்சிடும். சமூதாயத்தில் உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக நடைபெறாத விஷயங்கள் இப்பொழுது நடைபெறும். பல வித சோதனைகளை சந்தித்தாலும் இறைவன் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

பிறந்த ஜாதகத்தின் படி இப்பொழுது நல்ல தசை நடைபெற்று கொண்டு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். பிறந்த ஜாதகத்தில் தசை நன்றாக இல்லாவிட்டாலும், இந்த கோட்சார கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் நற்பலன்களை கொடுக்கும்.

குரு, ராகு, சுக்கிரன், புதன், சனி பகவான் நற்பலன்களை கொடுக்கப் போகின்றார்கள். தெளிவான முடிவெடுப்பீர்கள். பொருளாதார வளம் மேம்படும். ஆடம்பர வசதிகள் பெருகும். கல்யாண பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவடையும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.

கணவன் மனைவி இடையே அந்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் குதூகலம் உண்டாகும். தனியார் துறையில் புரிகின்றவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அலுவலத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளையும், வருகின்ற வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரம், தொழில் சீராக நடைபெறும். செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment