Connect with us

கோவில் நகரமான கும்பகோணத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு- தெருக்கள் சீல் வைப்பு

kumbakonam covid

செய்திகள்

கோவில் நகரமான கும்பகோணத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு- தெருக்கள் சீல் வைப்பு

கோவில் நகரமான கும்பகோணத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு- தெருக்கள் சீல் வைப்பு

கோவில் நகரம் என அழைக்கப்படும்  கும்பகோணத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கீழே தடுக்கி விழுந்தால் கூட கோவில் வாசலில்தான் விழ வேண்டும் என்கிற அளவுக்கு கோவில்கள் அதிகம் உள்ளன.

ஒவ்வொரு கோவிலும் ஒரு முக்கிய அம்சத்தை கொண்டிருப்பதால் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பரிகாரங்களுக்காக இங்கு உலகம் முழுவதும் பக்தர்கள் வருகிறார்கள்.

மேலும் நவக்கிரகங்களுக்குரிய 9 நவக்கிரக பரிகார கோவில்களும் இங்குதான் உள்ளன. அதனால் கும்பகோணம் ஜே ஜே என்று வாகன போக்குவரத்துடன் செழிப்பாக இருக்கும்.

பல ஊர் மக்கள் இங்கு வாழ்வதால் மற்ற ஊர்களை காட்டிலும் இங்கு மிக விரைவாக கொரோனா பரவி விடுகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவி வருவதால்  தொற்று பரவல் அதிகமுள்ள 5 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கும்பகோணத்தில் கவரைத்தெரு, எம்.சி.எஸ்.ஆர். தெரு உள்பட 5 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top