குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

குமரி மாவட்டத்தில் இன்று அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்டத்திற்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குமரி மாவட்டத்தில் அதிக மழை காரணமாக முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் குமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் அதேபோல் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று குமரி மாவட்டம் செல்ல இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment