குளு குளு ஜிகர்தண்டா செய்யலாம் வாங்க!!

0c8728e1c95b37d664128e85d68801d8

ஜிகர்தண்டா பலருக்கும் பிடித்த குளிர் பானங்களில் ஒன்று, இதனைப் பொதுவாக கடைகளிலேயே நாம் வாங்கிக் குடிப்போம், இப்போது அதனை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாதாம் பிசின் – 2 ஸ்பூன்

சர்பத் – 4 ஸ்பூன்

சர்க்கரை – தேவையான அளவு

ஐஸ்கட்டி – தேவையான அளவு

பாலாடை – தேவையான அளவு

பால் – 100 மில்லி

ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்

செய்முறை

1. பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும், அடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்.

2. மறுநாள் பாதாம் பிசினை கழுவி பாத்திரத்திற்குள் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

3. அடுத்து ஒரு டம்ளரில் பால்- பாதாம் பிசின் கலவையினைப் போட்டு அதில் சர்பத் ஊற்றி, ஐஸ்க்ரீம் போட்டு பாலாடையினை போட்டால் ஜிகர்தண்டா ரெடி!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.