ஆஸ்காருக்கு அடி எடுத்து வைத்தது நயன்தாரா-விக்னேஷ்சிவன் படம்!

தற்போது தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்து வருகின்றனர் நயன்தாரா விக்னேஷ் சிவன். அவர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.கூலாங்கல்

இவர்கள் தயாரித்த திரைப்படம் ஒன்று ஆஸ்காருக்கு பரிந்துரையாகி உள்ளது. இந்த ஆஸ்கார் உலக சினிமாக்களை ஒன்றிணைக்கும் விருதாக காணப்படுவது ஆகும். இந்த ஆஸ்கார் விருது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு பெரிய ஆசையாகவும் காணப்படும்.

இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளது விக்னேஷ் சிவன்-நயன்தாரா  திரைப்படம்.  அதன்படி வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கூலாங்கல் படம் தேர்வாகியுள்ளது.

மண்டேலா, நயட்டு, ஷேர்னி உள்ளிட்ட 14 படங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது கூலாங்கல் படம் தேர்வானது. வெளிநாட்டு படத்துக்கான போட்டியில் கூலாங்கல் தேர்வுக்காக ட்விட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தகவல் அளித்துள்ளார்.

இந்த கூலாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாரா சேர்ந்து தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூலாங்கல் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் காணப்பட்டுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print