Tamil Nadu
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள்: கே.எஸ்.அழகிரி

திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை என்றும், திமுகவும், காங்கிரசும் இணைந்த கரங்கள் என்றும் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி |அளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று கூறினார். இதனையடுத்து திமுக கடும் அதிருப்தி கொண்டு நேற்று காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தது. இதனால் கூட்டணியே முறிவடையும் நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் இன்று டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ‘திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை என்றும், திமுகவும், காங்கிரசும் இணைந்த கரங்கள் என்றும் திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
