ராகுல் காந்தி டி-சர்ட்!! பாஜக-விற்கு கே .எஸ் அழகிரி நச் பேட்டி!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். இந்த சூழலில் நேற்றையதினம் நடைபயணம் மேற்கொண்டு இருந்த போது டீசர்ட் அணிந்து குறித்து பாஜக விமர்சனம் செய்தது.

அதன் படி, ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட போது அணிந்திருந்த டி-ஷர்ட் 40 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது என்று பாஜக கூறியிருந்தது.

குறிப்பாக சுமார் 41 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டி சர்ட் அணிந்திருந்தாக குற்றம்சாட்டியிருந்தது.  அப்போது ராஜீவ்காந்தி நடைபயணம் மேற்கொண்ட போது பாஜக அஞ்சுவதாக காங்கிரஸ் விமர்சனம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் மோடி 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் அணியலாம் என்றால், ராகுல் காந்தி ஏன் அணியக்கூடாத என்ற கேள்வியை கே.எஸ் அழகிரி முன்வைத்துள்ளார்.

அதோடு ராகுல் காந்தி அணிந்திருந்த டி சர்ட் திருப்பூரில் வாங்கியதாகவும், திருப்பூரில் 40 ஆயிரத்திற்கு டி சர்ட் கிடையாது என்பதால் இத்தகைய குற்றச்சாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமென கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment