கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார்!! போலீசார் வழக்கு பதிவு!!

காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரியின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி கண்னன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக்நகரில் வாகனத்தை முந்தி செல்லும் போது ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவரின்  உறவினர்  இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவரும் அசோக்நகர் காவல்நிலையத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது சுமார் 4 மணிநேரம் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

இதில் ஐஏஎஸ் அதிகாரியும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையருமான கண்ணன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் தற்போது நிலவிவரும் சூழலில் இத்தகைய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.