கிருஷ்ணர் உடலில் இருக்கும் ஆயுதங்கள் எவை?! அவற்றின் மகிமை..

a6bb70ce234df4a11f165535803ce4c4

கிருஷ்ணரை காதல் மன்னனாய், குறும்புத்தனம் கொப்பளிக்கும் குழந்தையாய் தந்திரங்கள் மிகுந்த தலைவனாய் மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனா, கிருஷ்ணர் உடலில் ஐவகை ஆயுதங்கள் இருக்குன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!

சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை என அழைக்கப்படும் ஐவகை ஆயுதங்கள்தான் கிருஷ்ணரிடம் இருக்கிறது. நன்மை செய்வோருக்கும், பக்தியுடனும், காதலுடனும் பார்ப்பவருக்கு அவை ஆபரணங்களாய் தெரியும். ஆனால், தீமை செய்வோருக்கும், எதிரிகளுக்கும் அவையெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும்.

சக்கரம், வில்,வாள்,கதை இதெல்லாம் ஆயுதங்கள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சங்கினை எப்படி ஆயுதங்களில் சேர்க்கமுடியும்?! சங்கு மகாலட்சுமி அம்சமானதாயிற்றே! மருத்துவ குணமும், ஆன்மீக அம்சமும் நிறைந்ததாயிற்றே என குழம்புபவர்களுக்கான ஒரு கதை இருக்கு. இதோ….

கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும், துரியோதனனும் துவாரகைக்குப் போனார்கள். அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்டார். வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என இருவரும் கேட்டனர்.

9d8d116419e76671494d6272eb750c3c

அதற்கு, துரியோதனா! தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என கிருஷ்ணர் பதிலளித்தார். துரியோதனன் சற்று யோசித்து, சரி, அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என கிருஷ்ணனை வேண்டிக்கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார்ரும் சரி என்று ஒப்புக் கொண்டார். இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆயுதம் ஏந்துவதில்லை என துரியோதனனுக்கு வாக்களித்துவிட்டேன் அர்ஜுனா! இனி என்னால் ஒரு பயனும் இல்லை என அர்ஜுனனிடம் புலம்பினான் கிருஷ்ணர். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என கேட்க, சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக்கொண்டார். கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்கும், அர்ஜுனனின் வரத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. ஏனென்றால் தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் போர் தொடங்க, போரினை முடிக்க, எஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு.

ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு அறிந்திருக்கவில்லை. மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்துக்கொண்டான். போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான். அதன்பிறகுதான் அவன் யோசித்தான். ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே! என வருந்தினான்.

காலம் கடந்து வருந்தி என்ன பயன்?!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.