Connect with us

கிருஷ்ண ஜெயந்தி!! ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த மக்கள்!!

201702181435262016 rameswaram ramanathaswamy temple 22 theertham SECVPF

தமிழகம்

கிருஷ்ண ஜெயந்தி!! ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த மக்கள்!!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளா வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் படிப்படியாக வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில் நாடுமுழுவதும் இன்றைய தினத்தில் கோலாகலமாக கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புனித நீராட அதிகாலை முதலில் இருந்தே குவிந்துள்ளனர்.

அதன் பிறகு ராமநாதபுரம் சுவாமி கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் காவல்துறையினரின் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் அதிகாலை முதலில் இருந்தே பூஜைகள் செய்தும் , ஆலயங்களில்  பொதுமக்கள் குவிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top