Connect with us

கோவில் மணி ஓசையின் தத்துவம்!

Spirituality

கோவில் மணி ஓசையின் தத்துவம்!

டிங்…. டிங்…ன்னு ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் , நிக்கல் , குரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய இந்த 7 உலோகங்களின் கலவையே இந்த மணி.

3744807a9fd2970a80e3da4fa1b9f189

மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும். ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்துவகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.

மனித மூளையானது வலது , இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டாம். அப்படி செயல்படும் விதத்தில்தான் கோவில் மணி தயாரிக்கப்படுகிறது.

கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும் .
ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது.

மணியிலிருந்து எழும் ஓசையில் நாம் “ஓம்” என்ற மந்திரத்தை உணர முடியும். கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு படைக்கும் போதும் அடிப்பதுண்டு . அதில்லாமல் கோவிலுக்கு போவோர் தங்கள் பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும் கோவில்மணியை ஒலிக்கவிடுவதுண்டு. ஒவ்வொரு கோயிலிலும் கர்ப்பகிரகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுவாக கோயில் வாசலில் கட்டியிருக்கும் மணியை கோயிலுக்குள் நுழையும்போது ஒலிக்கவிடுவதன் காரணம், நமது ஆழ்மனதை விழிக்க செய்வதற்காகவே செய்யப்படுகிறது. உடலால் தூங்குபவர்களை ஓசையின்மூலம் எழுப்புவதுபோல், மனதையும் எழுப்பவே இந்த முறையை பின்பற்றுகிறோம். இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம் கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளியும் நம்மை மேலும் ஊக்குவிக்கின்றன.

கோவில் மணியின் ஒலியை கூர்ந்து கேட்பது ஒரு வகையில் தியானம் செய்வதற்கு ஈடாகும். கோவில் மணியிலிருந்து ஒலி எழும்பும் நேரம் நம் மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகள் அழிக்கப்படுகின்றன.

நாம் தன்னிலை இழந்த நிலைக்கு செல்ல தயாராகிறோம். மனம் விழிப்புணர்ச்சி அடைகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டுவர உங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.

கோயில் மணிகளை அதன் தண்டை இழுத்து அடிப்பதால், அதன் ஒலி பல அலைவரிசைகளை வெளியேற்றுகிறது. இது வளிமண்டலத்தில் பரவுகிறது. ஒலிகள் வெளிப்படும்போது அதனுடன் சேர்த்து புனிதமான கதிர்களும் வெளி வருகின்றன . இவை வளிமண்டலத்தில் உள்ள தீய ஆற்றல்களை அழிக்கின்றன.

பொதுவாக இந்துக்களின் வீடுகளில் பூஜையின்போது மணியோசை எழுப்பி இறைவனை வணங்குவது வழக்கம். மணியோசையால் இறைவனை அழைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. மணியோசையின் ரீங்காரத்தால் தீய சக்திகள் வீட்டிலிருந்து நீங்கிவிடும் என்பதும் ஒரு எண்ணமாகும். இறைவனை வணங்கும்போது எந்த கெட்ட வார்த்தைகளும், கேட்டக்கூடாத ஓசைகளும் செவிகளில் விழக்கூடாது என்பதற்காகவும் இந்த ஒலியை எழுப்பி இறைவனை வணங்குவர்.

முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடனும் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே செய்தனர் என்பது இன்று அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்ற முயற்சிப்போம். நிச்சயம் அது நமக்கு நன்மையையே தரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top