சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பொரியல்!

f7ced0030d3417e3c20964ca56f05cce

தேவையானவை: 
கோவைக்காய் – 8 
வெங்காயம் – 2 
தக்காளி – 1 
கடுகு – 1 ஸ்பூன் 
உளுந்து பருப்பு – 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை – சிறிதளவு 
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் 
தனியாத் தூள் – 2 ஸ்பூன் 
சோம்பு – 1/2 ஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை: 
1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் சோம்பினை வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் கோவைக்காயைப் போட்டு வதக்கி, அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு சேர்த்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கினால் கோவைக்காய் பொரியல் ரெடி. 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.