அதிமுகவில் இருக்கும் பிரபலங்களை திமுகவுக்கு அழைத்து வரவேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் பல அதிமுக பிரபலங்களை திமுகவுக்கு அழைத்து வந்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது அதிமுக பிரபலம் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்து உள்ளதை அடுத்து செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு டாஸ்க் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் கடந்த சில நாள்களாக அதிருப்தியில் இருந்தார் என்பதும் குறிப்பாக ஓபிஎஸ் அணியில் இருந்த அவர் ஓபிஎஸ் செயல்பாடுகளினால் அதிருப்தி அடைந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பின் போது அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 14 வயதில் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டு வாக்கு கேட்டு நின்றேன் என்றும், மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து மகிழ்ச்சி என்றும் செந்தில் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். நான்காண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஆதரித்துப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி காலில் விழுந்து கொல்லைப்புறம் வழியாக வந்த பழனிசாமிக்கு பேச தகுதி இல்லை என்று திமுகவில் இணைந்த பின் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை செல்வராஜை அடுத்து அதிமுகவில் மேலும் சில பிரபலங்கள் திமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை செல்வராஜ், அதிமுக, திமுக, admk, dmk, kovai selvaraj