இரண்டு வருடங்களுக்கு பிறகு நடந்த கொரோனா மரணம்- வூகான் மாகாண மக்கள் அதிர்ச்சி

உலகத்துக்கு கொரோனாவை பரப்பியதின் முக்கிய பங்கே சீனாவின் வூகான் மாகாணத்துக்கு தான் உண்டு. 2019ம் ஆண்டு இங்குதான் முதன் முதலில் கொரோனா பரவியபோது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஊடகங்களும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

அந்த நேரத்தில் நிறைய அதிர்ச்சியளிக்க கூடிய மரணங்களும் நடந்தன.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை குறைய தொடங்கியது கொரோனாவும் அங்கு படிப்படியாக கொண்டு வரப்பட்டு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

தற்போது மீண்டும் கொரோனா பரவல் அங்கு ஆரம்பித்துள்ளது. கொரோனாவை பரப்பிய மாகாணம் என உலக மக்களால் கடுமையாக வசைபாடப்பட்ட வூகான் மாகாணத்தில் கடந்த 2 வருடங்களில் அதிக அளவில் கொரோனா பரவல் இல்லையாம்.

அதை விட ஆச்சரியம் கொரோனாவால் உயிரிழப்பு இல்லையாம்.

தற்போது கொரோனாவால் அங்கு ஒருவர் உயிரிழந்து இருப்பதால் கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment