கூலமேடு ஜல்லிக்கட்டு:19 பேருக்கு காயம்; 200 காளைகள் களம்!!

பொதுவாக தமிழர்கள் வீர மிகுந்தவர்கள் என்று போற்றப்படுவர். ஏனென்றால் அவர்கள் செயல்கள் மட்டும் இன்றி விளையாட்டிலும் வீர விளையாட்டு விளையாட்டி கொண்டு வந்தனர்.

அவற்றுள் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் தினங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு புள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இதில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தினம் மற்றும் ஒரு இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக காலை தொடங்கியுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள  கூலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலையில் தொடங்கியது. சேலம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு மலை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகள் களமிறங்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியானது வீர விளையாட்டாக காணப்பட்டாலும் காயமும் படுகாயமும் உயிரிழப்பும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகவே காணப்பட்டு வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.