சளி தொல்லையா ? கொங்கு தக்காளி ரசம் செய்து சாப்பிடலாமா…

சளி தொல்லையா ? கொங்கு தக்காளி ரசம் செய்து சாப்பிடலாமா…

நமக்கு உடை நிலை சரி இல்லையா , வாக்கில் சுவை தெரியலையா? கொங்கு தக்காளி ரசம் செய்து சாப்பிடலாமா…

தேவைான பொருட்கள்

பழுத்த நாட்டுத் தக்காளி – கால் கிலோ .

கறிவேப்பிலை – சிறிதளவு .

பூண்டு – 3 பல் .

மிளகு – 5 .

காய்ந்த மிளகாய் – 2

சீரகம் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு .

சின்ன வெங்காயம் – 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தக்காளி ரசம் செய்முறை:

தக்காளியைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும். பின்பு பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, அரைத்ததைச் சேர்த்துக் கிளறவும்.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

இதில் பிசைந்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வர ஆரம்பிக்கும் போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து மூடி விடவும். சுவையான கொங்கு தக்காளி ரசம் ரெடி.

 

 

 

———————-

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.