கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்

தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் எண்ணற்றவை உள்ளன. ஆறுபடை வீடுகள் முதல் எத்தனையோ சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் முக்கியமான பல முருகன் கோவில்கள் கொங்கு மண்டலம் என அழைக்கப்பட கூடிய கோவை, சேலம், ஈரோடு , திருப்பூர் மாவட்ட பகுதிகளிலேயே உள்ளது. தாராபுரம் அருகே உள்ள ஊதியூர் என்ற இடத்தில் கொங்கண சித்தர் வணங்கிய முருகன் கோவில் உள்ளது

பழனி முருகன் கோவில் தென்மாவட்டமான திண்டுக்கல் மாவட்ட எல்கைக்குட்பட்டு வந்தாலும் அது கொங்கு மண்டலமான கோவை மாவட்டத்தை ஒட்டிதான் உள்ளது.

அது போல கோவை மாவட்டத்தில் மருதமலை முருகன் கோவில், ஓதிமலை முருகன் கோவில், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பச்சைமலை, பவளமலை, திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன் பூண்டி, சிவன்மலை, என பல புகழ்பெற்ற கோவில்கள், சேலம் மாவட்டத்தில் கந்தாஷ்ரமம், கஞ்சமலை உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் இந்த பகுதியில் உள்ளன.

இப்படியாக தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட கொங்கு மண்டலத்தை ஒட்டிதான் அதிகமான முருகன் கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.