கொல்கத்தா வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிக்கல்.. அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை எவை?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடிய நிலையில் கடைசி ஓவரில் அந்த அணிகள் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் நான்கு பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் எடுத்து கொல்கத்தா ஐந்தாவது பந்தில் விக்கெட்டையும் இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஆறாவது பந்தில் சிக்ஸர் மன்னன் ரிங்குசிங் ஒரு பவுண்டரி அடித்ததால் கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் தற்போது 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் 16 புள்ளிகள் உடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் 13 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இதனை அடுத்து லக்னோ அணி 11 புள்ளிகள் உடன் இருக்கும் நிலையில் 5 அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த ஐந்து அணிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரன் ரேட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 10 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தலா எட்டு புள்ளிகளுடன் ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எவை என்பதை உறுதியாக கூற முடியாத நிலையில் உள்ளது. குஜராத் மட்டுமே 16 புள்ளிகளுடன் தற்போது கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தாலும் அதனை அடுத்துள்ள ஒன்பது அணிகளில் எந்த மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டன.

எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவில் இந்த ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எவை எவை என்பதை கணிக்க முடியாத அளவிற்கு வெற்றியும் தோல்வியும் அனைத்து அணிகளுக்கும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் கூட இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் புள்ளி பட்டியலை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில போட்டிகள் முடிந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எவை எவை என்பதை சரியாக கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...