கடைசி ஓவரில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி: ஐதராபாத் அணிக்கு மேலும் ஒரு தோல்வி..!

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி திரில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது என்பதும் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரானா அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 166 மட்டுமே எடுத்ததால் கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தி போட வந்தார். அந்த ஓவரில் அவர் மூன்றாவது பந்தில் விக்கெட் எடுத்தார் என்பதும் கடைசி பந்தில் ஆறு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் புவனேஷ் குமார் பந்தை மிஸ் செய்ததால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் கொல்கத்தா அணி இன்று கடைசி சில ஓவர்கள் மிக அபாரமாக பந்து வீசியதன் காரணமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி எட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...