கழிவறையில் குழந்தை பெற்ற பெண் ஒருவர் கழிவறை கண்ணாடியை உடைத்து அதன் வழியாக குழந்தையை தூக்கி எறிந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண் நிக்கோலஸ் என்பவர் ஆண் ஒருவருடன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பதும் அதன் பிறகு சில மாதங்கள் கழித்து அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்கோலஸ் என்ற அந்த பெண் கர்ப்பமானது கூட தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் கர்ப்பமாக இருக்கிறாயா என அவரது கணவர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி கூறிய நிலையில் தனக்கு மாதவிடாய் சரியாக வருவதால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் திடீரென அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது ஏழு மாத குழந்தை அவரது வயிற்றில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென நிக்கோலஸ் கழிப்பறைக்கு சென்று அங்கேயே குழந்தை பெற்று அந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துள்ளார்.
இந்த நிலையில் கழிப்பறை கண்ணாடி உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தை படுகாயத்துடன் கீழே இருந்தது என்றும் உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது.
காவல்துறையினர் உடனடியாக வந்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த குழந்தை சில நிமிடங்களில் இறந்து விட்டது. இந்த நிலையில் குழந்தையை கழிவறையில் பெற்று ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த நிக்கோலஸ் என்ற அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.