பெங்களூருவின் கோப்பை கனவை கலைத்த கொல்கத்தா! ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகம்!!

இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது.

ஆர்.சி.பி-கே.கே.ஆர்டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இன்றைய தினம் பெங்களூர் அணி பேட்டிங் வரிசையானது மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

கோலிஇதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 138 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. மேலும் பெங்களூருவில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 39 ரன்கள் அடித்திருந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் போட்டியானது இருபுறமும் சமமாக காணப்பட்டது.

மேலும் கடைசி நிமிடம் வரை போட்டியானது விறுவிறுப்பான நிலைமையில் இருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கிறிஸ்டியன் பந்துவீசினார்.

அவரின் முதல் பந்திலேயே பவுண்டரி செல்ல வெற்றி வெளிச்சம் கொல்கத்தாவுக்கு பிரகாசமாக இருந்தது. இதனால் 19.4 ஆவது ஓவரில் கொல்கத்தா அணியானது தனது இலக்கை தாண்டியது.

கே கே ஆர்மேலும் அதோடு மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியானது அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி டெல்லி அணியுடன் மோத உள்ளது. இதனால் இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

கோலிஅதோடு மட்டுமல்லாமல் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கும் பெங்களூர் அணியில் இதுவே தனது தலைமையிலான கடைசி போட்டியாக மாறியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment