ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா தோத்தாலும் கொல்கத்தா வீரர் ஹாட்ரிக் சாதனை..!!

நேற்றைய தினம் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்தது. இருந்தாலும்கூட கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் சாதனை படைத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி நேற்று கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் டெல்லி அணியின் லலித் விக்கெட்டை வீழ்த்திய போது 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர் பட்டியலில் இணைந்தார்.

இதன் மூலம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெயரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராவோ மற்றும் மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

அதேபோல் ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் என்ற பெயரையும் சுனில் நரேன் பெற்றுள்ளார். மேலும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்திலும் சுனில் நரைன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ipl