ஆன்மிக சுற்றுலா செல்லப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிச்சிட்டுப் போங்க…!

வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் நாம் செல்லும் காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் வழக்கமாக சாமி கும்பிட்டு விட்டுச் செல்வோம். குறிப்பாக நாம் நம் குலதெய்வத்தை நினைத்து காரியம் வெற்றிகரமகா நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளலாம்.

வடநாடுகளுக்கும், திருப்பதிக்கும் ஆன்மிக சுற்றுலா செல்வர். பலருக்கும் நெடுந்தொலைவு பிரயாணம் ரொம்ப பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாத்திரை மருந்துகளையும் இன்னபிற பொருள்களையும் பத்திரமாகக் கொண்டு செல்வர். போகும்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி சாமி கும்பிட வேண்டும்? எந்தெந்த பாடல்களை படிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

அடுத்து கோளறு பதிகம் படித்து விட்டுச் சென்றால் நல்லது. எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் பதிகம் தான் கோள் அறு பதிகம்.

Gnanasambanthar Appar
Gnanasambanthar, Appar

ஞானசம்பந்தப்பெருமானை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அப்பர் உடன் இருக்கிறார். அப்போது அவர் வயதில் பெரியவராக இருப்பதால் ஞானசம்பந்தரிடம் சொல்கிறார். இப்போது நாளும் கோளும் சரியில்லை குழந்தை. கொஞ்ச நாள் கழித்துப் போகலாம் என்று.

உடனே இளம் சிறுவனாக இருக்கும் ஞானசம்பந்தர் சொல்கிறார் அப்பரே நீங்களே இப்படி சொல்லலாமா…இந்த நாளும் கோளும் யார் இயக்குறா? நம்ம தலைவர் இயக்குகிறார். அவருக்குக் கீழே தானே இதெல்லாம் இயங்கிக் கொண்டு இருக்கு. இந்த நாளும் கோளும் நம்மை என்ன செய்து விடப் போகிறது?

tour
tour

சிவனடியார்களை இது பாதிக்காது என்கிற உறுதியை எதிர்கால அடியார்க்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் கடவுள் ஒரு சூழலை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஞானசம்பந்தர் சொல்கிறார்.

அப்போது அவர் பாடியது தான் வேயுறு தோளிபங்கன் என்ற இந்த கோளறு பதிகம்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 

மதுரைக்குப் போன இடத்திலாவது அவருக்கு நல்ல சூழல் அமைந்ததா என்றால் இல்லை. அவர் இருந்த திருமணத்திற்கு தீ வைக்கப்பட்டது. அனல் வாதம், புனல்வாதம் செய்து தான் அவர் ஜெயித்துக் காட்டினார்.

கூன் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயைப் போக்க பலவாறு முயற்சி செய்தார். கடைசியில் வெற்றியும் பெற்றார். கூன்பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாகவும் மாற்றிக் கொடுத்தார்.

wear vipoothi
wear vipoothi

ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவை எல்லாம் பனி போல் விலகிச்செல்ல இந்த கோளறு பதிகம் அமைந்தது. ஆன்மிக யாத்திரை சென்றால் அருணகிரி நாதர் அருளிய சேயவன் என்ற பாடல்.

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்நிற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன்                                                                                                   செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.