Connect with us

கோலாகல தக்காளி திருவிழா: ஆறாக ஓடிய 130 டன் சாறு!!

30 1409379833 tomatina 1111 600

தமிழகம்

கோலாகல தக்காளி திருவிழா: ஆறாக ஓடிய 130 டன் சாறு!!

ஸ்பெயின் நாட்டில் ஸ்வென்ஸியா நகரில் தக்காளி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மீண்டும் திருவிழா கலைகட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சுமார் 20,000 த்திற்கும் அதிகமான மக்கள், இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். இதில் 130 டன் எடை கொண்ட தக்காளி பழங்கள் டிரக்குகளில் வரவழைக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்கள், உற்சாகத்துடன் தக்காளி பழங்களை வீசியடித்து கொண்டாடினர். இதனால் அப்பகுதி முழுவதும் தக்காளி சாறு ஆறாக ஓடியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top