ஆன்மிக அன்பர்களுக்கு எல்லாம் வரும் மிகப்பெரிய சந்தேகம் இதுதாங்க…!

இன்று பலருக்கும் வரும் சந்தேகங்களில் ஒன்று இது. கோவிலுக்குப் போய் விட்டு வந்தால் குளிக்கலாமா என்பது தான்.

கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் என்னென்ன பிரசாதங்கள் எல்லாம் கொடுத்தார்களோ அவற்றை யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுங்க. அதுக்கு அப்புறம் அவற்றை எங்கு பாதுகாத்து வைக்க வேண்டுமோ அங்கு வைங்க.

நீண்ட தூரம் உள்ள கோவில்களுக்குச் சென்று வந்திருப்போம். உதாரணமாக சென்னை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை என எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் பேருந்து, ரெயில், கார் என பயணம் செய்து வந்திருப்போம்.

ரொம்ப அலைச்சலா இருக்கும். காருல கூட அவ்வளவு தெரியாது. பேருந்து ரெயில்களில் எல்லாம் ரொம்ப கூட்டத்துல நசுங்கி இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவித்து தான் பயணம் செய்து இருப்போம்.

அது மட்டுமல்லாமல் போகும் இடங்களில் கிளைமேட் ரொம்பவே முக்கியம். வெயில் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமாகக் களைப்பு தெரியும். குளிர் மழை என்றால் அதில் நனைந்து சளி பிடித்துத் தொல்லை தரும்.

எல்லாத்தையும் தாண்டி கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்து இருப்போம். எப்படா குளிக்கலாம்னு தோணும். அப்போது சிலர் சொல்வார்கள். கோவிலுக்குப் போயிட்டு வந்து குளிக்கக்கூடாது. இது கூட உனக்குத் தெரியாதான்னு கேட்பாங்க. என்னடா செய்றதுன்னு யோசிப்போம்.

இவ்வளவு ஏன்…ஒரு சிலர் உடனடியாக காலைக் கூட கழுவக்கூடாது. அப்படிக் கழுவினா கோவிலுக்குப் போயிட்டு வந்த புண்ணியம் தண்ணியோடு போயிடும்னு சொல்வாங்க. இது நிஜமா என்று நமக்குள் அடிக்கடி கேள்வி எழும்.

singer3
singer3

நீங்க ரொம்ப யோசிக்காதீங்க. வீட்டுக்கு வந்த உடனே கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணுங்க. கோவில்ல கொடுத்த பிரசாதங்களை எல்லாம் பிரிச்சி எடுங்க. யாரு யாருக்கு கொடுக்கணுமோ அவங்களுக்கு எல்லாம் கொடுங்க.

மற்ற பொருள்களைப் பாதுகாப்பா வைங்க. வச்சிட்டு கொஞ்சம் ஏதாவது குடிங்க. தண்ணியோ, காபியோ, டீயோ, ஜூஸோ உங்கள் விருப்பம்தான். கொஞ்ச நேரம் நிதானமா உட்காருங்க.

முதல்ல நம்ம பெரியவங்க என்ன சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். இதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்கலாம். ஒரு ஆலயத்துல நாம நிற்கும்போது அந்த தெய்வத்தின் அருள்பார்வை நம்மீது படும். அதன் மூலம் நம்மைச் சுற்றி ஒரு வளையம் போன்ற பாதுகாப்பு ஏற்படும். அதனால கோவிலுக்குப் போயிட்டு வந்தால் நம் உடலில் பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும்.

நம் உடலைச் சுற்றி இருக்கக்கூடிய தெய்வீக சக்தியானது நாம யாரைப் பார்க்கிறோமோ, எங்கு உட்கார்ந்திருக்குமோ, யாரிடம் பேசுகிறோமோ அங்கும் அந்த தெய்வீக சக்தி உறைந்து இருக்கும். அதனால தான் கோவிலுக்குப் போயிட்டு வந்து பிரசாதமாக விபூதியை எல்லோருக்கும் நாம கொடுக்கிறோம்.

Tiruvannamalai
Tiruvannamalai

கோவிலுக்குப் போயிட்டு வந்த உடனே கடகடவென பாத்ரூம்க்குப் போயிடாதீங்க. உடனே குளிச்சிடாதீங்க. அது பக்கத்துல இருக்குற கோயிலானாலும் சரி.

தூரத்துல இருக்குற கோயிலுக்குப் போயிட்டு வந்தாலும் சரி. கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து நிதானமா இருந்துட்டு அதுக்கு அப்புறம் போங்க. நாம உட்காரும்போது நம்மக்கிட்ட இருக்குற அந்த அருள்சக்தியை நாம முழுமையா நிறைத்துக் கொண்டு அதற்குப் பிறகு குளிக்கப் போகலாம்.

பொதுவாகவே ஆலய வழிபாடு என்பது தெய்வீக அனுபவத்தையும், ஒருவித மலர்ச்சியையும் கொடுக்கிறது. அதனால அதை முழுமையாக அனுபவிக்குற நேரத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.