Connect with us

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த கோலி!!

Sports

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த கோலி!!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந்தேதி நடக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.

f5baf3b41ff4e400bb0f6fe0f0cd90ac-2

இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறது.

வழக்கமாக வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கிளம்புவதற்கு முன்பாக கேப்டனும், பயிற்சியாளரும் செய்தியாளர்களை சந்தித்து தொடர் குறித்து பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

செய்தியாளர் சந்திப்பு நடந்தால் ரோகித் சர்மாவுடனான பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்கப்படும். அதனால் கோலி கோபமடையக்கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் கோலி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடும் இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Sports

To Top