இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி திடீரென்று விலகல்! புதிய கேப்டன் யார்?

கடந்த ஆண்டு முழுவதும் நம் இந்தியாவின் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டியில் ஒரே கேப்டனாக செயல்பட்டார் கேப்டன் கோலி. ஆனால் அவருக்கு ஐசிசி கோப்பை என்பது கனவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக அவர் அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

முதலாவது ஐபிஎல் போட்டியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல் கிடைத்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இன்று தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திடீரென்று கேப்டன் கோலி விலகி உள்ளார். ஜோகன்னஸ்பார்க்கில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கே.எல்.ராகுல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுகிறார். தசை பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார் கோலி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment