Connect with us

கொடுங்கையூர் லாக்அப் கைதி மரணம்: 5 போலீசார் சஸ்பெண்ட்!

Suspend Phtoto

Tamil Nadu

கொடுங்கையூர் லாக்அப் கைதி மரணம்: 5 போலீசார் சஸ்பெண்ட்!

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு. இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 27 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று மாலை அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இவரது மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் விசாரிப்பதாகவும் அதோடு மரணம் அடைந்த ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை என சென்னை கூடுதல் ஆணையர் அன்பு கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே சென்னையில் லாக்அப் கைதி மரணம் அடைந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைப்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top