கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சசிகலாவிடம் மீண்டும் நாளை விசாரனை !!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று காலை முதல் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் நாளை விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக ஐ.ஜி சுதாகரன் தலைமையிலான காவல்துறையினர் சசிகலாவிடம் சுமார் 100 கேள்விகள் கேட்க தயார்செய்து வைத்திருந்ததாகவும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து யார் உங்களிடம் தகவல் தெரிவித்தனர் என்றும் கனராஜ் போயஸ் தோட்டத்தில் பணியாற்றினாரா ? சம்பவத்திற்கு பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா ? பங்களாவின் சாவி யாரிடம் இருக்கும் ? சம்பவத்தின்போது பணியில் யார் யார் இருந்தார்கள் போன்ற பல கேள்விகளை காவல்துறையினர் கேட்டனர்.
இதனிடையே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான் எந்தவித விசாரணைகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சந்தேகம் இருக்கிறதா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை நடத்தப்படும் விசாரனையில் முக்கிய திருப்பங்கள் ஏற்படத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
