கோடநாடு எஸ்டேட் வழக்கு! புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரங்களை மறைக்க முயற்சி நடைப்பெற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைப்பெற்றது. இந்த சம்பவத்தில் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.

அதே சமயம் பங்களாவில் காவல் பணியில் இருந்த ஓம் பகதூரை மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த மரத்தினை எஸ்டேட் நிர்வாகம் அகற்றி விட்டு, வேறோரு மரத்தினை நட்டு பராமரித்து வந்ததை சிபிசிஐடி போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த சூழலில் வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் மரத்தை வெட்டி அகற்றியதால் ஆதாரங்களை அழிக்க முயற்சியா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment