கொடநாடு வழக்கு! அரசு தரப்பில் பரபரப்பு தகவல்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட 314 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

வரத்து குறைவு! பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

இந்த சூழலில் விசாரணை அமர்வு இன்று மீண்டும் வந்தது. அப்போது கனகராய் உள்ளிட்ட குற்றவாளிகள் பேசிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதோடு 314 பேரிடம் நடத்திய விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஆதாரங்களை ஆய்வு செய்ய துறையில் திறமையான அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி… கேரளாவில் பயங்கரம்!!

இதன் காரணமாக கால அவகாசம் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கை ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.