சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு.. எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சம்மன்!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டில் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது. இதில் பங்காளாவின் வேலைகாரர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

இதற்கு முக்கிய காரணமாக இருந்த கார் ஓட்டுனர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றசம்பவத்தில் ஈடுப்பட்டனர். அதே சமயம் கனகராஜ் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு முதற்கட்டமாக 750 செல்போன் தகவல்களை உண்மைத்தன்மை அறியும் சோதனையில் ஈடுப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் அப்போதைய எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பட்டுள்ளது.

ஜன.9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

குறிப்பாக தகவல் எப்போது பெறப்பட்டது? எதன் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்றது? போன்ற கேள்விகள் எழுப்பப்படலாம் என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.