கொடநாடு வழக்கு! விசாரணை அதிகாரி நியமனம்..!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டு கொடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடத்தில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய, தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது.

சத்யா கொலை வழக்கு! காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்..!!

இத்தகைய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கிட்டத்தட்ட 316 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடத்த ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

மேலும், கொள்ளை சம்பவம் குறித்து மீண்டும் நேரில் ஆய்வு செய்ய, தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment