கொடநாடு வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இத்தகைய சம்பவமானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதன் படி, கிட்டத்தட்ட 230 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

மேலும், இத்தகைய உத்தரவானது தற்போது நிலவி வரும் சூழலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.