“கோடநாடு” வழக்கு விசாரணை; “அக்டோபர் 1ஆம் தேதி ஒத்திவைப்பு”!!

11d7a90ac235ea8b9710b6579d9da333

தற்போது  எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக . கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்து எதிர்க் கட்சியாக மாறியுள்ளது அதிமுக. மேலும் இந்த அதிமுகவிற்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு. இதுகுறித்து தற்போது சில அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றி தனிப்படை அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.5c9ad47742c556abf7cbf139d82ce5b5

மேலும் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கோடநாடு  வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு நிலையில் தனிப்படை அமைக்க பட்டதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடிபழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை. இந்த  நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான விசாரணை தீவிரம் அடைய உள்ளது என்றும் கூறப்படுகிறது. கோடநாடு வழக்கு 5 மரணங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டி இருப்பதாக நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் வரிசையில் புலன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றத்தில் 4 வார காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு வருகின்ற ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உண்மை வெளிவர யாரை வேண்டுமானாலும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் விசாரணை நடைபெற்று வருவதால் இத்தகைய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment