கொடைக்கானல் சில்வர் நீர்வீழ்ச்சியை ரசித்த சுற்றுலா பயணிகள் மீது கார் மோதி காயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊருக்கு முன்னேயே அழகிய சில்வர் நீர் வீழ்ச்சி உள்ளது இந்த நீர் வீழ்ச்சியை கடந்துதான் கொடைக்கானல் நகருக்கு செல்ல வேண்டும்.

இந்த நீர் வீழ்ச்சி அருகே இன்று சென்ற மகேந்திரா ஜைலோ கார் ஒன்று பிரேக் பிடிக்காமல் அங்கு நின்று நீர் வீழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 32 பேர் காயமடைந்தனர்.

விசாரணையில் அந்த கார் வத்தலக்குண்டை சேர்ந்த கார் என்று தெரிய வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment