
தமிழகம்
கொடைக்கானல்: கோலாகலமாக தொடங்கியது 59-வது மலர் கண்காட்சி!!
கொரனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படாத நிலையில் தற்போது கொடைக்கானலில் 59வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது.
கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அமைச்சர்கள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளனர். இதில் வேளாண்மைத் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 25-வகை மலர்கள் பூத்து குழுங்குவது மட்டுமில்லாமல் 300- க்கும் மேற்பட்ட தொட்டடிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 25,000 மலர்களை கொண்ட திருவள்ளூவர் சிலை, கார்ட்டூன் தத்துருவ சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளி குவிந்து வருகின்றனர்.
மேலும், இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், படகு அலங்காரப்போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த மலர்கண்காட்சியானது முதல் முறையாக 6 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
