கனமழை! எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, நாகை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கனமழை! புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுக்காவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனருக்கு வலிப்பு! கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment