Connect with us

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க…. மத்திய அரசு அறிவிப்பு!

booster vaccination camp

செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க…. மத்திய அரசு அறிவிப்பு!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க…. மத்திய அரசு அறிவிப்பு!

பலரும் திரும்பி பார்க்கின்ற வகையில் இந்தியா தடுப்பூசி அதிக அளவு செலுத்தி சாதனை செய்து கொண்டு வருகிறது. மேலும் இன்றைய தினம் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தற்போது வரை இந்தியாவில் பெரும்பாலும் 2 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன. ஓரிரு இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகே கூடுதல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கூடுதல் தடுப்பூசி டோஸ்  தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முதல் அல்லது இரண்டாவது டோஸ் போட்டத்திற்கு பின் கொரோனா வந்தால் மூன்று மாதத்திற்கு பின்பு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதத்தில் அனுப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top