2 நாட்களில் மட்டும் மாநாடு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

நம் தமிழகத்தில் பல கோடிகளில் புரளும் தொழில் என்றால் அதனை சினிமா தொழில் என்று கூறலாம். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆனவுடன் அவை வெற்றி பெற்று பல கோடி ரூபாய்களை வசூல் செய்யும்.

அண்ணாத்த

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம். வெளியான மூன்றே வாரங்களில் ரூபாய் 239 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது.

பிரபல இயக்குனர் நெல்சன் கூட்டணியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாளில் ரூபாய் 7.35 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment