Connect with us

சென்னை மேயர் பிரியாவை அதட்டிய கே.என் நேரு: ஆர்.எஸ்.பாரதி அதிரடி!!

Capture 67

தமிழகம்

சென்னை மேயர் பிரியாவை அதட்டிய கே.என் நேரு: ஆர்.எஸ்.பாரதி அதிரடி!!

தந்தை மகளிடம் பேசுவது போலதான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் அமைச்சர் பேசியதாக கூறப்பட்டாலும் இனி அவ்வாறு நடக்காதவாறு தமிழக முதல்வர் மூலம் அறிவுறுத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த கால வாழ்க்கையை மறைப்பதற்கு திமுக மீது குற்றம் சாட்டி பேட்டி கொடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் நிர்வாகம் உட்பட அனைத்து துறைகளிலும் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், அதிமுக-வில் கைவிடப்பட்ட திட்டங்கள் திமுக அரசால் மீண்டும் தொடரப்பட்டு வருவதாக ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

அதே போல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறியது. இதற்கு மேயர் பிரியா ஒருமையில் பேசியதாக நினைக்கவில்லை உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன் கூறியிருந்தார்.

இருப்பினும், அமைச்சர் கே.என்.நேரு வரும் காலங்களில் இனி அவ்வாறு நடக்காதவாறு தமிழக முதல்வர் மூலம் அறிவுறுத்தப்படும் என ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top