இந்திய டி20 கேப்டன் இவரா? அப்ப ரோஹித் சர்மா என்ன ஆச்சு?

இந்தியா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பதும், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடர் உடன் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் திடீரென அவரது பேட்டிங் பார்ம் மிகவும் மோசமானதை அடுத்து அவர் கேப்டன் ஆவாரா? என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி இந்திய டி20 அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கே கேப்டன் பதவியை வழங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் எனவே கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஓய்வுக்கு பின் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு அவரிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.